Thursday, February 5, 2009

எழுச்சி நாடகங்களில் என்னை கவர்ந்த காட்சிகள்.

நம்மினம் எழுச்சி பெற வேண்டும் என்று பல எழுச்சி நாடகங்கள் நம் கலைஞர்களால் படைக்கப் பட்டன. அதில் என்னைக் கவர்ந்த சில காட்சிகள் வண்ணங்களாக உங்கள் பார்வைக்கு.





வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா அல்லது போராடுமா என்ற நாட்டிய நாடகத்தில் போராட தூண்டும் வன்னி மன்னன் போல் கம்பீரமான தோற்றம்.



தோகை விரித்தாடும் வன்னி மயிலாக காட்சி தருபவள் கடைசியில் வாளை எடுத்து போராடுவபவளாக மாற்றம் தந்து தன் அபிநயத்தால் அவையை கட்டி போட்ட நடன தாரகை.




கைக்குழந்தயுடன் வன்னி மண்ணின் அவலத்தை நமக்குணர்த்த வந்த நாடகத்தில் ஓர் காட்சி.



விடியாத நமக்கு என்று எண்ணி நிற்கும் நம்மவர்க்கு விடியலும் உண்டு என்று உணர்த்தி நின்ற உணர்வுப் பொழுது.



வார்த்தைகளின்றி மௌனித்து இசைக்கு அசைவு செய்த நிக‌ழ்வின் வெளிப்பாடு.


என் இரசனை உங்களையும் தொட்டிருந்தால் உங்கள் எண்ணத்தையும் இங்கு விட்டு செல்லுங்கள்

5 comments:

தமிழ் மதுரம் said...

புலம் பெயர் தேசத்தில் இத்தகைய நிகழ்வுகள் மூலமாவது எமது கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்பதில் சந்தோசம். தொடருங்கள் உங்கள் பணியை.

Anonymous said...

கானடாவில் வாழும் ஈழத் தமிழர்களின் உன்னதமானக் கலை நிகழ்ச்சிகள் மக்கள் எழுந்து நின்று உணர்ச்சியுடன் பாராட்டுமளவிற்கு இருக்கும்.
இனிய தமிழில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாய் அருமையாக இருக்கும்.
புலிகளின் வீரக்கதைகள் புதிய புறநானுறாகப் படைக்கப் பட்டுள்ளன்.
வெல்லட்டும் ஈழம்.
மன்ந்தளராது அவரவர் முடிந்ததைச் செய்வோம்.

முனைவர் இரா.குணசீலன் said...

தங்களைக் கவர்ந்த காட்சிகள் என்னையும் கவர்ந்தன.ஆயிரம் சொற்கள் உணர்த்தும் பொருளை ஒரு காட்சி புலப்படுத்திவிடும் என்பது உண்மைதான்.

Anonymous said...

ம்

Several tips said...

படங்கள் வெகு அருமை