Friday, March 21, 2008

பூக்கள்

இளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.



மஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்!


புன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன?



சில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு ஒரு முன்னுதாரணம்!


இரத்தச் சிவப்பு என்கிறார்கள், பூவுடன் சேர்ந்து விட்டால் கண்ணுக்கு குளிர்ச்சிதான்!



பூக்களை பல வகைகளில் பாவிக்கலாம். மற்றவர்களின் காதில் வையாதவரையும்!


உங்களை இவ்வண்ணங்கள் கவர்ந்திருந்தால் அறியத்தாருங்கள்.

6 comments:

நாதஸ் said...

பூக்கள் எப்பவும் அழகு தான்... அழகாக இருக்கு :)... நானும் உங்களை மாதிரி சில பூக்களை படம் பிடுச்சு போட்டு இருக்கேன்.. :) நான் இருக்கும் ஊர் கூட உங்க ஊர் மாதிரி தான்.. :(

(Concentrate on the composition it will make ur pics better :) )

காரூரன் said...

நன்றிகள் Nathas,

உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள். நான் போட்டிருப்பவை எந்த மாற்றமும் செய்யாமல் போடப்பட்டவை. உங்கள் தளத்தையும் எட்டிப் பார்த்தேன் அருமையான படங்கள்.

KARTHIK said...

//கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு ஒரு முன்னுதாரணம்!//

பூக்களைப்போன்று உங்கள் வரிகளும் அழகு காரூன்.

காரூரன் said...

நன்றிகள் கார்த்திக்!,

தமிழில் ஆர்வம் உண்டு. வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவியியலைப் பற்றி தொகுப்புகள் செய்த முன் அனுபவம் உண்டு. நேரம் கிடைக்கும் போது ஏதாவது கிறுக்கலாம் என்ற எண்ணம். உங்கள் மண்ணில்( தமிழ் நாட்டில்) கற்ற கல்வி தான் சோறு போடுகின்றது. அடிக்கடி வந்து போங்கோ!

Anonymous said...

;D

யசோதா.பத்மநாதன் said...

கண்ணுக்கு இயற்கை அன்னை தந்த பரிசு பூக்கள்.நறுமணத்தையும் தேனையும் அதற்குள் வைத்து பறவை இனத்துக்கு அதைப் பெறும் ஆற்றலையும் கொடுத்த இயற்கையின் வல்லமையை என்னவென்பது!

முடிந்தால் இன்னும் சிலவற்றை இணையுங்கள்.பார்க்க ஆவலுடையேன்.