இளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.
மஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்!
புன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன?
சில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு ஒரு முன்னுதாரணம்!
இரத்தச் சிவப்பு என்கிறார்கள், பூவுடன் சேர்ந்து விட்டால் கண்ணுக்கு குளிர்ச்சிதான்!
பூக்களை பல வகைகளில் பாவிக்கலாம். மற்றவர்களின் காதில் வையாதவரையும்!
உங்களை இவ்வண்ணங்கள் கவர்ந்திருந்தால் அறியத்தாருங்கள்.
Friday, March 21, 2008
பூக்கள்
Posted by
காரூரன்
at
12:17 PM
6
comments
Subscribe to:
Posts (Atom)