Flickrஐ பாவித்து புளொக்கிற்கு அனுப்பி பார்க்கும் முயற்சி.
Monday, November 30, 2009
Tuesday, October 6, 2009
வீட்டில் அழகு வைக்கப்படும் பொருட்கள் -PiT போட்டிக்கு
அரிதாய் கிடைக்கும் எவையும் மேற்குலகத்தில் காட்சிப் பொருட்கள். அவற்றில் சில இங்கே.
ஆட்டம்
ஆணும் பெண்ணும் ஆடிப் பாடினால் அலுப்பு வராதாம்!
ஆதி வாசிகள்
அம்மணத்திலிருந்து அரைத்துண்டு மறைத்ததால் அது அன்றைய நாகரீகம்!
முழு ஆடையிலிருந்து அரையாடைக்குப் போவது இன்றைய நாகரீகம்!
அழகுக்கு கலர் ஒரு பொருட்டல்ல!
குடம் தாங்கும் மெல்லிடையாள்
கண்ணாடிக்குள் கண் கவர் ஓடம்.
என்ன கைவண்ணம்!
Posted by
காரூரன்
at
5:51 PM
2
comments
Labels: pit, காட்சிப்பொருட்கள், படங்கள்
Monday, February 16, 2009
ஆட்டத்தில் சில தருணங்கள்..
படங்கள் எடுக்கும்போது சில தருணங்கள் அந்தரத்தில் இருப்பது போல் தோன்றிவிடும். புலம் பெயர்ந்த மண்ணில் கலைகளில் ஈடுபடும் குழந்தைகள் அதிகம். அவற்றில் சில உங்கள் பார்வைக்காக..
Posted by
காரூரன்
at
6:33 AM
3
comments
Thursday, February 5, 2009
எழுச்சி நாடகங்களில் என்னை கவர்ந்த காட்சிகள்.
நம்மினம் எழுச்சி பெற வேண்டும் என்று பல எழுச்சி நாடகங்கள் நம் கலைஞர்களால் படைக்கப் பட்டன. அதில் என்னைக் கவர்ந்த சில காட்சிகள் வண்ணங்களாக உங்கள் பார்வைக்கு.
வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா அல்லது போராடுமா என்ற நாட்டிய நாடகத்தில் போராட தூண்டும் வன்னி மன்னன் போல் கம்பீரமான தோற்றம்.
தோகை விரித்தாடும் வன்னி மயிலாக காட்சி தருபவள் கடைசியில் வாளை எடுத்து போராடுவபவளாக மாற்றம் தந்து தன் அபிநயத்தால் அவையை கட்டி போட்ட நடன தாரகை.
கைக்குழந்தயுடன் வன்னி மண்ணின் அவலத்தை நமக்குணர்த்த வந்த நாடகத்தில் ஓர் காட்சி.
விடியாத நமக்கு என்று எண்ணி நிற்கும் நம்மவர்க்கு விடியலும் உண்டு என்று உணர்த்தி நின்ற உணர்வுப் பொழுது.
வார்த்தைகளின்றி மௌனித்து இசைக்கு அசைவு செய்த நிகழ்வின் வெளிப்பாடு.
என் இரசனை உங்களையும் தொட்டிருந்தால் உங்கள் எண்ணத்தையும் இங்கு விட்டு செல்லுங்கள்
Posted by
காரூரன்
at
7:09 PM
5
comments
Labels: காட்சி, நாடகம், நாட்டியம், புகைப்படம்
Tuesday, January 13, 2009
குழந்தைகள் அழகுதான்.
மனச்சோர்வா!, குழந்தைகளுடன் விளையாடிப் பாருங்கள், பறந்துவிடும் உங்கள் கவலை.. இதோ என் கிளிக்கில் அவர்கள் வெளிப்பாடு.
இது கேட்ட சிரிப்பு.
இன்பத்தில் சிரிப்பவன் அதிஸ்டசாலி
துன்பத்தில் சிரிப்பவன் ஞானி
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
நிலை மறந்து சிரிப்பவன் நிதானமற்றவன்
நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமவுள்ளவன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
உழைப்பால் சிரிப்பவன் உய்ர்ந்த மனிதன்
கள்ளமில்லாச் சிரிப்பு
மேலே உள்ள படத்தை "தமிழ் புகைப்படக்கலை" 2009 தை மாத போட்டிக்காக கொடுத்திருந்தேன்.
அன்னை மடியில் அவள் சிரிப்பு
தம்பியின் ஆசை முத்தம்
ஏளனச்சிரிப்பு
கமரா சிரிப்பு
நீங்களும் சிரிக்க ரசிக்கத் தெரிந்தவராயின், உங்கள் ரசனையை பகிர்ந்து செல்லுங்கள்.
Posted by
காரூரன்
at
6:21 PM
9
comments
Labels: படங்கள்